OUR CLIENTS
ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு Posted on 05-Dec-2018 ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தால் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய செய்தியோ, தொடரோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஆணையத்தின் அனுமதி இன்றி ஒளிபரப்பக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Label