OUR CLIENTS
ஆந்திராவுக்கு அடுத்த 5 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஆந்திராவுக்கு அடுத்த 5 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை Posted on 05-Dec-2018 ஆந்திராவுக்கு அடுத்த 5 தினங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளான விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 2 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக நெல்லூர் மற்றும் திருப்பதி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான மழை பெய்துள்ளது. 
கடந்த திங்கள்கிழமை முதல் கிழக்குப் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக இதுபோன்ற எதிர்பாராத மழை பெய்கிறது. மேலும் கிழக்கு வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

Label