OUR CLIENTS
நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு
நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு Posted on 06-Dec-2018 நாடு முழுவதும் இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துத்துவா அமைப்புகள் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்குதல் அளித்து வருகின்றன.
உச்சநீதிமன்றத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தைக் குறித்த மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்படுகிறது.அசம்பாவிதங்களையும் மத ரீதியான மோதல்களையும் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தியில் நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று டெல்லி மும்பை, உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர். பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர்.

Label