OUR CLIENTS
பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்...
பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்... Posted on 06-Dec-2018 பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்...

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயராமன், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். தமிழக அரசின் சார்பில் அவருக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் நேரில் மருத்துவமனைக்கு சென்று அவரது நலம் விசாரித்தனர். நெல் ஜெயராமனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார்.
நெல் வகைகளை காக்க பாடுபட்டதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 169 பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்தவர் ஆவார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவரான இவர்,பாரம்பரிய நெல் விதைகளை அழிவிலிருத்து காத்ததால் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டார்.

Label