OUR CLIENTS
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக மூவரை நியமித்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக மூவரை நியமித்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு Posted on 06-Dec-2018 புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக மூவரை நியமித்தது செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பாஜகவைச் சேர்ந்த மூவரை ஆளுநர் நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வக்கணபதி ஆகிய மூவரைத் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நியமித்தார்.
மூவரையும் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். மூவரின் நியமனத்தை எதிர்த்துக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர்களைத் தன்னிச்சையாக நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி, நியமனத்துக்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நவம்பர் இருபதாம் நாள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கில் இன்று வழங்கிய தீர்ப்பில் சட்டப்பேரவை  உறுப்பினர்களாக மூவரை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது. நியமனத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Label