OUR CLIENTS
அஸ்வின் அபார பந்துவீச்சு: தேநீர் இடைவேளையின்போது ஆஸி. அணி 117/4
அஸ்வின் அபார பந்துவீச்சு: தேநீர் இடைவேளையின்போது ஆஸி. அணி 117/4 Posted on 07-Dec-2018 அஸ்வின் அபார பந்துவீச்சு: தேநீர் இடைவேளையின்போது ஆஸி. அணி 117/4

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஆட்டம் தொடங்கியபோது ஹேஸில்வுட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஷமி. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி. அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கிடைத்தது. ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார் ஃபிஞ்ச். இதன்பிறகு ஹாரிஸும் கவாஜாவும் நன்கு விளையாடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஷான் மார்ஷ் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி 2 ரன்களில் வெளியேறினார். 125 பந்துகள்வரை எதிர்கொண்டு நிதானமாக விளையாடிய கவாஜா, அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சினால் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி உற்சாகமடைந்தது. எனினும் மேலும் விக்கெட் விழாமல் ஹேன்ட்ஸ்காம்பும் ஹெட்டும் பார்த்துக்கொண்டார்கள். 
2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்துள்ளது. ஹேண்ட்ஸ்காம்ப் 33, ஹெட் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணியின் ஸ்கோரை எட்ட ஆஸி. அணி இன்னமும் 133 ரன்கள் எடுக்கவேண்டியுள்ளது. 

Label