OUR CLIENTS
கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்!
கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்! Posted on 07-Dec-2018 கருணாநிதி சிலை திறப்பு விழா: டிசம்பர் 9-ல் சோனியாவை சந்திக்கிறார் ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் முழு உருவச் வெண்கலச் சிலை திறப்பு விழா அழைப்பிதழ் அளிப்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு தில்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்திக்கிறார். 
கருணாநிதி சிலையை டிசம்பர் 16-ஆம் தேதி இந்தியத் தலைவர்கள் பங்கேற்று திறந்து வைக்க உள்ளனர். 5 முறை முதல்வராக இருந்து தமிழகத்துக்கு எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றித் தந்து, தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களில் உன்னதமாக கொலுவீற்றிருக்கும் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் நிறுவப்பட உள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும், கருணாநிதியின் சிலையும் ஒரே இடத்தில் அருகருகே அமைய உள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அறிவாலயத்தின் முகப்பில் அண்ணாவின் சிலை இருந்தது. இந்தச் சிலை 1987 செப்டம்பர் 16-இல் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அறிவாலயத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதனால், அண்ணாவின் சிலையும் வெண்கலச் சிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக அகற்றப்பட்டு, கருணாநிதியின் சிலை தயாராகி வரும் மீஞ்சூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கெனவே அறிவாலயத்தில் இருந்தது போன்று அதே வடிவத்தில் அண்ணாவின் வெண்கலச் சிலை செதுக்கப்பட உள்ளது. இந்த இரு சிலைகளும் டிசம்பர் 16-ஆம் தேதி அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.
கருணாநிதியின் சிலையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தியை அழைத்து திறப்பதற்கு திமுக தலைமை முயற்சித்து வருகிறது. அவரது நேரம் கிடைக்காவிட்டால் சோனியாகாந்தி அழைத்து திறக்க உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட பல்வேறு தேசிய தலைவர்களும் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியானது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு தில்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசுகிறார். அப்போது, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திலும் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. 

Label