OUR CLIENTS
தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்: அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு தகவல்
தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்: அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு தகவல் Posted on 07-Dec-2018 தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக வாபஸ்: அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு தகவல்

தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது. 
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையான ஊதியம், காலமுறை ஊதிய உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைவது,  குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 4ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
மேலும், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்துக்கு தடைவிதிக்கவேண்டும். மேலும் இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்கவேண்டும் என மதுரையைச் சேர்ந்த முகமதுயூனுஸ் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். 
இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுதது அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலர் வரும் 17-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை அன்றைய தினத்துககு ஒத்திவைத்தனர்.  

Label