OUR CLIENTS
சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது
சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது Posted on 07-Dec-2018 சென்னை விமான நிலையத்தில் 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது

ஆலந்தூர்:-    
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வெளிநாட்டு முனையம் பகுதியில் உள்ள சுவர் கண்ணாடிகள் உடைந்து விழும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 83-வது முறையாக கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு பகுதி, 3-வது நுழைவு வாயிலில் மேல்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென உடைந்து விழுந்தது. சுமார் 4 அடி நீளம், 7 அடி உயரத்தில் அந்த கண்ணாடி பெயர்ந்து இருந்தது.
அந்த இடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடியை விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.
கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Label