OUR CLIENTS
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை; மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்த வணிகர்கள் திட்டம்: தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் டெல்லி செல்கின்றனர்
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை; மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்த வணிகர்கள் திட்டம்: தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் டெல்லி செல்கின்றனர் Posted on 07-Dec-2018 ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை; மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்த வணிகர்கள் திட்டம்: தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் டெல்லி செல்கின்றனர்

ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் களை சந்தித்து வலியுறுத்த தேசிய அளவில் வணிகர்கள் திட்டமிட் டுள்ளனர். அதற்காக தமிழகத் திலிருந்து 5 ஆயிரம் பேர் டெல்லிக்கு புறப்பட உள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியதாவது:
அண்மைக் காலமாக மின்னணு பொருட்கள், ஜவுளித் துறைகளில் ஆன்லைன் வர்த்தகம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது மளிகைப் பொருட்கள் விற்பனை மற்றும் ஹோட்டல் தொழிலிலும் ஆன்லைன் வர்த்தகம் நுழைத்துவிட்டது. கைபேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு வர்த்தகத்தில் 27 சதவீத வர்த்தகத்தை ஆன்லைன் வர்த்தகம் பறித்துக்கொண்டுள்ளது.
அதன் காரணமாக தமிழக நகரங்களில், சிறு வணிகர்கள் முதல், பெருவணிகர்கள் வரை அனைத்து மட்டங்களிலும் தங்கள் வியாபாரத்தை இழந்து கடைகளை மூடி வருகின்றனர். பல கடைகள் முன்பு ‘கடை வாடகைக்கு விடப் படும்’ என்ற போர்டு அதிக அளவில் மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
தற்போது வணிக நிறுவனங் களுக்கான சொத்து வரியும் உயர்த் தப்பட்டுள்ளது. தற்போது ஆன் லைன் வர்த்தகம் வளர்ச்சி பெறு வதால், வணிகர்கள் மட்டுமல்லாது, கடை உரிமையாளர்களும் பாதிக் கப்படுகின்றனர். கடைகளால் வருமானம் வராவிட்டாலும், உரிமையாளர்கள் சொத்து வரி கட்டியாக வேண்டும்.
இதேநிலை தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். பின்னர் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பலம் பெற்று, ஆட்சியாளர்களை அடக்கி ஆளும் நிலை ஏற்படும். அது வருங்காலத்தில் பொது மக்களையும் பாதிக்கக்கூடும்.
இதைக் கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வலியுறுத்தி டெல்லியில் உள்ள அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில், மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை வரும் 19-ம் தேதி சந்தித்து மனு அளிக்க இருக்கிறோம். அதற்காக நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் வணிகர்கள் டெல்லியில் கூட உள்ளனர். அதில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 ஆயிரம் பேர் டெல்லி செல்ல உள்ளனர்.

Label