OUR CLIENTS
வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... 13 ஆம் தேதிக்குப் பின் மழை
வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... 13 ஆம் தேதிக்குப் பின் மழை Posted on 10-Dec-2018 வங்கக்கடலை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு... 13 ஆம் தேதிக்குப் பின் மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய தெற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என்றும், இதன் காரணமாக வரும் 13 ஆம் தேதி தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த மையம் கூறியுள்ளது.
வரும் 14 மற்றும் 15 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

Label