OUR CLIENTS
எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று சந்திப்பு... மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை
எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று சந்திப்பு... மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை Posted on 10-Dec-2018 எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் இன்று சந்திப்பு... மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை

பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில்  இன்று நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் மகா பந்தனம் என்ற பெயரில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்த்து வந்த காங்கிரசுடன் அவர் பழைய கசப்பை மறந்து கைகோர்த்தார். இதே போன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து அவர் பேச்சு நடத்தினார். இதையடுத்து, டெல்லியில் இன்று நடைபெறும் கூட்டத்திற்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். 
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங்கும், கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். காங்கிரஸ் மீது இதுவரை அதிருப்தியில் இருந்த மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால் கூட்டணி வலுப்பெற்று உள்ளது.இடதுசாரிகளும் இக்கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்புள்ளது. பிரதமர் வேட்பாளர் யார், நடுநிலை வகிக்கும் இதர கட்சிகளை இணைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மாநிலக் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஜனநாயகத்தை வலுப்படுத்த தேசிய அளவில் ஒன்றுபட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். 

Label