OUR CLIENTS
சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி
சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி Posted on 10-Dec-2018 சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: அமைச்சர் ஜெயகுமார் பரபரப்பு பேட்டி

சென்னை:-

அதிமுகவிற்கு சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 
அமமுகவும், அதிமுகவும் இணைந்தால்தான் திமுகவை விரட்டமுடியும் என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்சசெல்வன் நேற்று கூறியிருந்தார். 
இந்நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக என்ற இமயமலை, அமமுக என்ற காளானுடன் இணைய முடியுமா என்று கேள்வி எழுப்பிய ஜெயகுமார், பந்திக்கு கூப்பிடாத நிலையில் வாழை இலை ஓட்டை என கூறுவதுபோல் உள்ளது தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு என்றார். 
அரசியலில் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்பது இல்லை, மக்களின் எண்ணத்தை புரிந்து கொள்பவர் தலைவராகிறார். மாநில நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்றார். 
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார். 

Label