OUR CLIENTS
தமிழகத்துடன் சண்டைபோட நாங்கள் விரும்பவில்லை கர்நாடக அமைச்சர் சிவகுமார் பேட்டி
தமிழகத்துடன் சண்டைபோட நாங்கள் விரும்பவில்லை கர்நாடக அமைச்சர் சிவகுமார் பேட்டி Posted on 10-Dec-2018 தமிழகத்துடன் சண்டைபோட நாங்கள் விரும்பவில்லை கர்நாடக அமைச்சர் சிவகுமார் பேட்டி

சென்னை, டிச.10-    

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை என்று கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
"தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. நாங்கள் தமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை. நாங்கள் சகோதர மாநிலம். பல கன்னடர்கள் தமிழகத்தில் உள்ளனர். அதேபோல், பல தமிழர்களும் கர்நாடகத்தில் வசிக்கின்றனர். நாங்கள் அனைவரும் சகோதரர்கள்" என்று கூறினார்.
மேலும்,"மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிகளவு பயனளிப்பதாக இருக்கும். இரு மாநிலங்களும் பயன்படுத்த முடியாமல் வீணாக கடலில் கலக்கும் நீரை தடுக்கவே அணை கட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு குடிநீர் தரவேண்டியது எங்கள் கடமை. எனவே அணை கட்டுவதில் உறுதியாக உள்ளோம்" என்று தெரிவித்தார்.
மொத்த கர்நாடாக மக்களும் ஆதராவாக இருப்பார்கள். கர்நாடகாவில் 6 கிராம மக்கள் எதிர்ப்பு என்பதில் உண்மையில்லை. 
திட்டம் வகுத்த பின் தமிழக அரசு உணர்ந்து கொள்ளும். மேகதாது அணையால் 67 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த திட்டம் குறித்து தெளிவு படுத்தவே நான் தமிழகம் வந்துள்ளேன்" என்று அமைச்சர் சிவகுமார் கூறினார்.

Label