OUR CLIENTS
வேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை
வேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை Posted on 10-Dec-2018 வேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல்! நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை

வேலூர், டிச.10-  

வேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவரும்,  காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேலூர் ராகவன் முரசொலி நாளிதழின் செய்தியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் அவர் இறந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நண்பர் ராகவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். 
மறைந்த ராகவன் குடும்பம் வாழ்க்கையை நடத்தவே முடியாத நிலையில் உள்ளது. இதை கவனத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் மறைந்த வேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் ராகவன் குடும்பத்துக்கு இழப்பீடாக உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். அத்துடன் அவரது குடும்பம் பயன்பெறும் வகையில் ராகவன் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். அதையும் உடனே விரைந்து போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். 
ராகவன் மறைவுக்கு பின்னால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ள அவரது மனைவிக்கும், மகனுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ராகவன் மறைவு பத்திரிகை உலகுக்கு ஒரு ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்று சொல்லியே ஆக வேண்டும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்துக்கு என்ன சொல்லி ஆறுதல் கூற முடியும். இனி வருங்காலத்தை வளமாக ராகவன் குடும்பம் அமைத்து கொள்ள தமிழக அரசும், செய்தித்துறையும்தான் அவருக்கு உதவிட முன்வர வேண்டும். 
செய்தியாளர்கள் இருக்கும்போதே குடும்பம் நடத்த சிரமப்படுகின்றனர். அவர்கள் இல்லாத வெற்றிடத்தில் அவர்களது குடும்பம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இப்படி பல துயரங்கள் எழுத்தாளர்கள் வாழ்வில் புதைந்து கிடக்கிறது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு ஏணி போன்று பணியாற்றுவதான் செய்தியாளரின் பொன்னான பணியாகும். அதனால் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என்ன பயன்?. செய்தியாளர்கள் மாதம் என்ன ஊதியம் வாங்குகின்றனர் என்பதை அரசுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆதலால் நிலைமையை உணர்ந்து மறைந்த ராகவன் குடும்பத்துக்கு தமிழக அரசால் செய்ய முடிந்த உதவிகளை காலத்தே கொடுத்து உதவிட முன்வர வேண்டும் என்று இதன் வாயிலாக தமிழக அரசை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் என்ஜேயூ தேசிய தலைவரும்,  காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் குறிப்பிட்டுள்ளார். 

Label