OUR CLIENTS
உச்சநீதிமன்றத்துக்கு அதிக அதிகாரம் ஆபத்து கே.கே.வேணுகோபால் பேச்சு
உச்சநீதிமன்றத்துக்கு அதிக அதிகாரம் ஆபத்து கே.கே.வேணுகோபால் பேச்சு Posted on 10-Dec-2018 உச்சநீதிமன்றத்துக்கு அதிக அதிகாரம் ஆபத்து  கே.கே.வேணுகோபால் பேச்சு

புதுடெல்லி, டிச.10-

உச்சநீதிமன்றத்துக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதால், அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்து போகும் சூழல் இருப்பதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், இந்தியாவில் உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு நெறிமுறைகளை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார்.
இதனால், நாட்டின் முதல் பிரதமர் நேரு கூறியதுபோல, நாடாளுமன்றத்தின் 3வது அவையாக உச்சநீதிமன்றம் மாறும் ஆபத்து இருப்பதாகவும், சபரிமலை உள்ளிட்ட மத விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை மக்கள் விரும்பவில்லை என்றும் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் இருவேறு குரல்களில் பேசியதாக விமர்சித்த அவர், படிப்பறிவு குறைவாக இருந்தாலும், எது நல்லது என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் கே.கே.வேணுகோபால் குறிப்பிட்டார்.

Label