OUR CLIENTS
பா.ரஞ்சித்தின் கருத்து, ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன் கருத்து
பா.ரஞ்சித்தின் கருத்து, ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன் கருத்து Posted on 10-Dec-2018 பா.ரஞ்சித்தின் கருத்து, ஆசை கற்பனையில் மட்டுமே நிறைவேறும்: இல.கணேசன் கருத்து

சென்னை:-

 பா.ரஞ்சித்தின் கருத்துகள் அவரது ஆசை, கற்பனையில் மட்டுமே நிறைவேறும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனித்தனி பட்டியலின கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதெல்லாம் பா.ரஞ்சித்தின் கருத்து, அவரது ஆசை. அவை கற்பனையில் மட்டுமே நிறைவேறும். 
பல்வேறு காரணங்களுக்காக வேறுபட்டு இருக்கும் பட்டியல் இன அமைப்பினர் ஒன்றாக வருவது அரிது. பட்டியல் இன அமைப்பினர் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது ஒருபோதும் நடக்காத செயல் என்றும் அவர்களின் பிரிவுகளுக்கு உள்ளே ஒற்றுமை ஏற்படுமானால் அதனை வரவேற்பதாகவும், அம்பேத்கரை பாஜக கொண்டாடுவதற்கு முழு உரிமை உள்ளது என தெரிவித்தார் இல.கணேசன்.
மேலும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 அணிகள் அல்ல தமிழகத்தில் மூன்றாவதாக ஓர் அணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார். 

Label