OUR CLIENTS
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது Posted on 10-Dec-2018 இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று கடும் சரிவுடன் தொடங்கியது. தேசியப் பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண் 185 புள்ளிகளும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டெண் 561 புள்ளிகளும் சரிந்தன. வணிக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 35 ஆயிரத்து 204 புள்ளிகளாகவும், நிப்டி 10 ஆயிரத்து 508 புள்ளிகளாகவும் இருந்தது.
இந்தியா புல்ஸ் ((india bulls)) ஹவுசிங் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் பின்செர்வ் ((Bajaj Finserv)), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் கடும் சரிவைச் சந்தித்த முதல் ஐந்து நிறுவனங்கள் ஆகும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்தது. வெள்ளிக் கிழமை அன்று ரூபாயின் மதிப்பு 70 ரூபாய் 80 காசுகளாக இருந்தது.  இன்று ரூபாயின் மதிப்பு 61 காசுகள் வீழ்ச்சி அடைந்தது. 

Label