OUR CLIENTS
உடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணம் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து
உடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணம் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து Posted on 10-Dec-2018 உடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணம் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, டிச.10-

உடுமலைப்பேட்டை கௌசல்யா மறுமணம் செய்துகொண்டதற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
ஜாதி ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கௌசல்யா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மறுமணம் செய்தார். கோவை வெள்ளலூரைச் சேர்ந்த நிமிர்வு கலையக ஒருங்கிணைப்பாளர் சக்தியுடனான இந்த மறுமணம், இணையேற்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கோவை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கௌசல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  "சாதி ஆணவத்தால் தனது காதல் இணையரை இழந்ததை தனது சொந்த சோகமாக மட்டும் சுருக்கிப் பார்க்காமல் சமூகக் கட்டமைப்பு தான் இதற்குக் காரணம் என்று செயல்பட்டு வந்த சகோதரி கவுசல்யா - பறை இசைக் கலைஞர் சக்தியை வாழ்வு இணையராக தேர்ந்தெடுத்துக் கொண்டதை அறிந்து மகிழ்கிறேன்.
இந்நிகழ்வை உடுமலை சங்கரின் தந்தையும் தம்பியும் பாட்டியும் பங்கேற்றே நடத்தி வைத்திருப்பது கவுசல்யாவின் பொது நோக்கத்துக்குக் கிடைத்த பாராட்டு. தமிழ்ச்சமூக வார்ப்புகளான கவுசல்யா - சக்தி இருவரும் இல்வாழ்விலும் சமூக வாழ்விலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!" என்றார்.

Label