OUR CLIENTS
அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு
அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு Posted on 27-Aug-2016 அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு

சேலம்:
அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.


இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் கலெக்டர் பங்களா நேர் எதிர் அய்யந்திருமாளிகை ரோட்டில் இயங்கி வரும் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 12ம் வகுப்பு தேறிய/தவறிய மற்றும் பட்டம் பெற்ற மகளிரிடமிருந்து Online மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சேலம் அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கணினி இயக்குபவர் (ஊடீஞஹ)  சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர்(ஆங்கிலம்), வரவேற்புக்கூட அலுவலக உதவியாளர், கட்டிடப்பட வரைவாளர், கம்மியர் மின்னணுவியல் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்மியர் கருவிகள் ஆகிய  ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்ற மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழிற்கல்வி தகுதிப்பெற விரும்பும் மகளிர் மற்றும் இல்லத்தரசிகள் இப்பயிற்சியில் சேரலாம்.  இப்பயிற்சியில் சேர மகளிருக்கு வயது வரம்பு கிடையாது.  பயிற்சி கட்டணம் இல்லை.  இலவச பஸ் மற்றும் ரயில் பாஸ் வழங்கப்படும்.  சீருடை மாதாந்திர உதவித் தொகை ரூ.500/- லேப்டாப், மிதிவண்டி, பாடபுத்தகம், வரைபட கருவிகள் ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இணைப்புச்சாலை காற்றோட்ட வசதி கொண்ட பாதுகாப்பான வளாகம் உடைய மகளிர்கென்றே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் உள்ளது. விண்ணப்பங்கள் Online மூலம் <http://www.skilltraining.tn.gov.in> என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க  கடைசி நாள் 30.8.2016. அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், சேலத்தில் 31.8.2016 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயிற்சியில் சேரலாம்.  மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் சேலம் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0427- 2403787, 2403789  என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.

Label