OUR CLIENTS
மலேசியாவில் மதுரை மாணவருக்கு தங்கப்பதக்கம்
மலேசியாவில் மதுரை மாணவருக்கு தங்கப்பதக்கம் Posted on 10-Dec-2018 மலேசியாவில் மதுரை மாணவருக்கு தங்கப்பதக்கம்

மலேசியா, டிச.10-

மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரது மகன் ரபீக், தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கராத்தே போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இவர், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், 50 கிலோ எடைப்பிரிவில் வெற்றிபெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தற்போது நாடு திரும்பிய அவருக்கு பள்ளி நிர்வாகம் உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Label