OUR CLIENTS
பிளாஸ்டிக் தடையை எதிர்த்து போராட்டத்தில் குதிக்க திட்டம்!
பிளாஸ்டிக் தடையை எதிர்த்து போராட்டத்தில் குதிக்க திட்டம்! Posted on 10-Dec-2018 பிளாஸ்டிக் தடையை எதிர்த்து  போராட்டத்தில் குதிக்க திட்டம்!

சென்னை, டிச.10-

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை தள்ளிப்போடும் முயற்சி வெற்றி பெறாததால் போராட்டம் நடத்த பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 2019 ஜனவரி முதல் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூன் 5ல்வெளியிடப்பட்டது. இந்த தடையை தள்ளிவைக்கும்படி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அது வெற்றி பெறாததால் போராட்டம் நடத்த, அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க செயலர் ராக்கப்பன் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை தள்ளிவைக்கும்படி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம். தலைமை செயலர், சுற்றுச்சூழல் செயலர், சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் என அனைவரும் எங்களின் கோரிக்கைகளை கேட்டனர். ஆனாலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் முறையில் தயாரிக்க 2022 வரை பிரதமர் அவகாசம் வழங்கியுள்ளார். ஆனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என அவர் கூறவில்லை. நாங்கள் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களுக்கு தடை விதித்ததை ரத்து செய்யக் கோருகிறோம். மேலும் 50 மைக்ரான் அளவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்காததால் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label