OUR CLIENTS
சாதிய வன்முறையை தடுக்க கோரி பாமகவினர் எஸ்.பி.,யிடம் புகார் மனு!
சாதிய வன்முறையை தடுக்க கோரி பாமகவினர் எஸ்.பி.,யிடம் புகார் மனு! Posted on 10-Dec-2018 சாதிய வன்முறையை தடுக்க கோரி பாமகவினர் எஸ்.பி.,யிடம் புகார் மனு!

வேலூர், டிச.10-

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் பா.ம.க., சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமாரிடம் கடந்த 8ம் தேதி பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இளவழகன் வேலூர் ஒருங்கிணைந்த மத்திய மாவட்டத்தின் பா.ம.க. சார்பில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 6ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அன்று அவரது திருவுருவப் படத்தின் முன்பு  மிக மோசமான சாதிய வன்முறையை தூண்டும் வகையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் உறுதிமொழி  எடுப்பது போன்றும், அவரைப் பின்பற்றி பலர் வழிமொழிவதாக எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது அநாகரீக மான செயலாகும். 
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தில் சாதிய மோதல், வன்முறை மற்றும் காவல்துறை ஆதிக்க சாதிக்கு துணை போவதாக தோற்றத்தை ஏற்படுத்தியுள்ள அந்த நபர் அவரை வழிமொழியும் கூட்டத்தையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு பின்னால் உள்ள இயக்கத்தை தடை செய்திட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட புகார் மனுவை பெற்றுக்கொண்ட வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி தெரிவித்தார். இந்த புகார் மனுவை அளிக்க வந்த முன்னாள் ஆற்காடு தொகுதி ஏம்எல்ஏ வும், பா.ம.க.வின் மாநில துணைப் பொதுச்செயலாளருமான  கே.எல்.இளவழகனுடன்,  வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.கே.முரளி, வேலூர் மாவட்ட செயலாளர் கு.வெங்கடேசன், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் வி.சுரேஷ்குமார், வேலூர் மாவட்ட துணைத் தலைவர் டி.எஸ்.தண்டபாணி (தண்டா), வி.தாமோதரன்(தாமு) மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

Label