OUR CLIENTS
பத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது!
பத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது! Posted on 10-Dec-2018 பத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடருது!

வேலூர், டிச.10-

தமிழகத்தில் பத்திரிகைகளில் விளம்பரம் தருவதற்கு வரைமுறை இல்லாத அவலம் தொடர்கதையாகி வருகிறது.

குறிப்பாக ஆர்என்ஐ இல்லாத பத்திரிகைகள், வார, மாத இதழ்களுக்கு அரசு சார்ந்த விளம்பரங்கள் தரப்படுகின்றன. இதன் பின்னணியில் என்ன உள்ளது என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது.
தமிழகத்தில்தான் அதிக அளவில் தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார, மாதம் இருமுறை, மாத இதழ்கள் வெளிவருகின்றன. இதில் பல நாளிதழ்கள் முறையாக ஆர்என்ஐ சான்றிதழ் பெற்று நடத்தப்படுகின்றன. பல நாளிதழ்கள் பருவத்துக்கு ஏற்ப விளம்பரத்தை நம்பியே இயங்குகின்றன. இதில் ஒரு ரகம் ஆர்என்ஐ என்ன என்றே தெரியாமல் பலர் பத்திரிகைகள் நடத்தி வருகின்றனர். 
வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் முறையாக வெளியாகாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் வழங்குகின்றன. இதனால் மக்களுக்கு சென்றடையவேண்டிய தகவல்கள் முறையாக சென்றடைவதில்லை.  இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர். 
விளம்பரம் வழங்கும் பொறுப்பை தமிழக அரசு செய்தித்துறையானது அந்தந்த மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்களை நம்பி ஒப்படைத்தது. ஆனால் அவர்களும் அதை கண்டும் காணாமல் அமைதி காத்து வருகின்றனர். இதனால் ஆர்என்ஐ இல்லாத மாத இதழ்கள், வார இதழ்கள், மாதம் இருமுறை இதழ்கள், ஒரு சில நாளிதழ்கள் அரசு விளம்பரங்களை மிரட்டியே வாங்கி விடுகின்றனர். இதனால் பல குழப்பங்கள் நிலவ வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. 
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் விளம்பரங்கள் வெளியிடுவதற்கும், அதை வாங்குவதற்கும் சான்றிதழ் பெற வேண்டும். பத்திரிகைகள் எவ்வளவு வெளிவருகிறது, எந்தெந்த மாநிலங்கள், மாவட்டங்களில் பத்திரிகை கிடைக்கிறது என்று அறிக்கை சமர்ப்பிக்க  வேண்டும். ஆர்என்ஐ-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கும் பத்திரிகைகள் மிக  சொற்பமே. இவ்வளவு முட்டுக்கட்டைகள் இருந்தும் எளிதில் விளம்பரம் வெளியிடும் பத்தரிகைகள் தமிழகத்தில் இன்றளவும் இருந்து கொண்டுதான் உள்ளது. அண்மையில் தீபாவளி அன்று வெளியான என்றுமே வெளிவராத ஒரு மாத இதழ் ஒன்றுக்கு அன்றைக்கு மட்டும் வேலூர் மாவட்டத்தில் இருந்து 15க்கும் மேற்பட்ட அரசு விளம்பரங்கள் வாரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பத்திரிகையின் ஆர்என்ஐ சான்றிதழை பார்த்தால்  தடை செய்யப்பட்ட இடத்தில் உள்ளது. இது எப்படி சாத்தியமானது. அரசு அலுவலர்கள் வேலூர் மாவட்டத்தில் பொறுப்பற்ற முறையில் பணியாற்றுவது இதைப்பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரியும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அந்த மாத இதழுக்கு விளம்பரங்களை வாரி வழங்கிய மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி, பேரூராட்சி என எதையும் விட்டு வைக்காமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதுகுறித்து விசாரணை கூட இன்றளவு வரை நடந்ததாக எந்த தகவலும் இல்லை. 
இதை மாவட்ட ஆட்சியர்களும் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர். இந்த நிலை நீடித்தால் அப்புறம் எதற்கு சான்றிதழ் (டிஏபிவி) பயன்படுகிறது என்பது புரியாத புதரிராக உள்ளது. செய்தித்துறை இயக்குநர் அலுவலகமும் இதுபோன்ற விஷயங்களில் கண்கொத்தி பாம்பு போன்று பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்திமாவட்ட செய்தி தொடர்பு அலுவலர்கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப கமிஷனுக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் மௌனம் காக்கின்றனர். இதுதான் இதில் உள்ள வெளிப்படையான உண்மையாகும். இந்த நிலை மாற செய்தித்துறை அமைச்சரும், செய்தித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லட்சக்கணக்கில் செலவு செய்து உரிமம் எடுப்பது எதற்கு என்று பல பத்திரிகைகள் முணுமுணுப்பதை கேட்க முடிகிறது.  இது செய்தித்துறையின் செவிக்கு எட்டினால் மட்டும் போதும். அனைத்தும் சிறப்பாக நடக்க வழிவகை செய்துவிடும். தங்களது அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றை உணர்ந்து இதுபோன்ற அர்ப்ப ஆசைக்கு ஆட்படாமல் செயல்பட்டால் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நெஞ்சு நிமிர்த்தி நடக்க வழிவகை செய்து கொள்ளலாம். பணத்துக்கு ஆசைப்பட்டால் கௌதம புத்தர் சொன்னது போன்று ஆசையே அழிவுக்கு காரணம் என்றாகி விடும். அதற்கு முன்பாக விழிப்புடன் இனி வரும் காலங்களில் செயல்படுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label