OUR CLIENTS
தேவகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு!
தேவகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு! Posted on 10-Dec-2018 தேவகோட்டை  அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு!

சிவகங்கை, டிச.10-

 தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு உதவி பெறும் நகரத்தார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
பள்ளியில் உள்ள அறை ஒன்றில் வைத்து வினாத்தாள்கள் பூட்டப்பட்டிருந்தன. இரவு அறைக்கதவின் பூட்டை உடைத்து 6 முதல் 10 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில பாடங்களின் முதல் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் மற்றும் 12ஆம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணக்கு, கணிணி அறிவியல் பாடங்களின் வினாத்தாள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனையடுத்து காரைக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வினாத்தாள் திருடப்பட்டது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

Label