OUR CLIENTS
ராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்!
ராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்! Posted on 10-Dec-2018 ராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்!

ராமநாதபுரம், டிச.10-

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி தப்பி ஓடினார். பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், சனவேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன் வீட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன் தினம் 13 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் சரமாரியாக உதைத்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த இளைஞர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்தோஷ்குமார் எனத் தெரியவந்தது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போலீஸார் சேர்த்தனர். நேற்று அதிகாலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாகக் கூறிவிட்டு பாதுகாப்பு போலீஸாரை ஏமாற்றிவிட்டுத் தப்பினார்.
இவரைப் பிடிக்க திருவாடானை சரக கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாதுகாப்புப் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக காவலர்கள் சுல்தான் இப்ராஹிம், காகிதமூர்த்தி, பாலமுருகன், முத்துராமலிங்கம் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ௐபிரகாஷ் மீனா பணியிடைநீக்கம் செய்து உத்தர விட்டார்.

Label