OUR CLIENTS
26 வனத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் விருது, பதக்கங்கள் - முதல்வர் பழனிசாமி வழங்கினார்
26 வனத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் விருது, பதக்கங்கள் - முதல்வர் பழனிசாமி வழங்கினார் Posted on 10-Dec-2018 26 வனத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு முதலமைச்சர் விருது, பதக்கங்கள் - முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை:-

வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளில் மிகச் சிறந்த முறையில் பணியாற்றிய வனத்துறை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2010-11ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருதிற்கு 14 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2013-14ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் விருதிற்கு 12 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 26  வனத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மாண்புமிகு விருதுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள்.
வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு, வன உயிரினங்களிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல், வன ஆராய்ச்சி, வன மேலாண்மை, வன அபிவிருத்தி, பசுமை பரப்பினை வனத்திற்கு வெளியே அதிகரித்தல், சூழல் சுற்றுலா, சிறந்த வேளாண் வனவியல் மாதிரிகள் / சிறந்த நடைமுறைகள், வனவியல் கல்வி மற்றும் பயிற்சி,  வன ஆக்கிரமிப்புகளை மீட்டெடுத்தல், வனக் கடத்தல் தடுப்பு, வனத் தீ தடுப்பு போன்ற பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொள்ளும் வனக் காவலர், வனக் காப்பாளர், வனவர், வனச்சரக அலுவலர், உதவி வனப் பாதுகாவலர், துணை வனப் பாதுகாவலர், மாவட்ட வனப் பாதுகாவலர் ஆகிய வனத்துறை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் """"மாண்புமிகு முதலமைச்சர் விருது"" வழங்கப்படுகிறது.  இவ்விருதுடன், வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர்களுக்கு 2000 ரூபாயும், வனவர் மற்றும் வனச் சரகர் அலுவலர்களுக்கு 3000 ரூபாயும், உதவி வனப் பாதுகாவலர்களுக்கு 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) டாக்டர் எச். மல்லேசப்பா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் டி.பி. ரகுநாத், இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label