OUR CLIENTS
தாஜ்மகாலில் மும்தாஸ் கல்லறைப் பகுதிக்கு செல்ல கூடுதல் கட்டணம்
தாஜ்மகாலில் மும்தாஸ் கல்லறைப் பகுதிக்கு செல்ல கூடுதல் கட்டணம் Posted on 10-Dec-2018 தாஜ்மகாலில் மும்தாஸ் கல்லறைப் பகுதிக்கு செல்ல கூடுதல் கட்டணம்

ஆக்ரா:-

தாஜ்மகாலில் மும்தாஸ் கல்லறைப் பகுதிக்கு சென்று பார்வையிட இனி கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இன்று அறிவித்துள்ளது.
17 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜின் நினைவாக எழுப்பிய வரலாற்று சின்னம் தாஜ்மகால். உலக அதிசயமான இந்த நினைவுச்சின்னத்தின் முசோலியத்திற்கு (கல்லறை பகுதி) வெள்ளைநிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள மினராக்களுக்கு பார்வையிட வரும் பொதுமக்களால் சேதம் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டு வந்தது. இந்த பகுதிக்கு அடியில் உள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜின் சமாதிகளுக்கும் சேதம் ஏற்படுவதாக புகார் இருந்தது.
இதற்காக அப்பகுதி மீது ஏறி செல்லாமல் வெளியில் இருந்தபடி தாஜ்மகாலை ரசிக்க பொதுமக்களுக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதை ஏற்று இன்று முதல் தாஜ்மகாலின் முக்கிய முசோலியத்திற்கு உள்ளே சென்று காண ரூ.200 கூடுதல் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆக்ராவின் இந்திய தொல்பொருள் ஆய்வத்துறையின் கண்காணிப்பாளரான வசந்த் ஸ்வர்ணகர் கூறும்போது,
” இனி ரூ.50 கட்டணமாக செலுத்துபவர்கள் தாஜ்மகாலின் முக்கிய கட்டிடம் அமைந்துள்ள மார்பிள் மேடைக்கு கீழே இருந்தபடி மட்டுமே பார்க்க முடியும். அருகில் மற்றும் உள்ளே நுழைந்து பார்க்க வேண்டுமானால் இனி மொத்தம் ரூ 250 செலுத்தவேண்டும். வெளிநாட்டினருக்கு ரூ.1300, சார்க் நாட்டவர்கள் ரூ.340க்கு பதிலாக ரூ.740 செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Label