OUR CLIENTS
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் Posted on 10-Dec-2018 ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி நாளை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமியை விசாரிக்க ஏற்கெனவே சம்மன் அனுப்பியது. அச்சமயத்தில் அவர் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்ததால், வேறோரு நாளில் ஆஜராக அனுமதி கோரியிருந்தார்.
இந்நிலையில், நாளை அவர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் குறித்தும், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் கூறிதான் சி.சி.டி.வி கேமராக்களை அணைத்தோம் என்ற அப்போலோ மருத்துவமனையின் விளக்கம் குறித்தும் பெருமாள்சாமியிடம் விசாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த வாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அல்லது செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பவும் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Label