OUR CLIENTS
சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாட்டம்: நடாளுமன்ற சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷம்
சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாட்டம்: நடாளுமன்ற சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷம் Posted on 10-Dec-2018 சர்வதேச மனித உரிமை தினம் கொண்டாட்டம்: நடாளுமன்ற சாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு கோஷம்

புதுடில்லி:-

சர்வதேச மனித உரிமை தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பல சமூக ஆர்வலர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் டில்லி நாடாளுமன்ற சாலையில் திரண்டனர்.
பிரபல சமூக ஆர்வலர்களான மேத்தா பட்கர், சப்னம் ஹஷ்மி, நீலகிரி மலையில் வாழும் பழங்குடியினர் சிலர், நர்மதா பச்சோ அந்தோலன் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பல சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் சர்வதேச மனித உரிமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்று நாடாளுமன்ற சாலையில் திரண்டவர்கள் அனைவரும் தேசப்பற்று பாடல்களை பாடினர். கருத்துரிமைக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
இந்த கொண்டாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் ‘‘ஜாஷ்ன் – இ – சம்விதன் என்ற நிகழ்ச்சியை அனுசரிக்க இங்கு மக்கள் கூடியுள்ளனர். நாட்டின் அரசிலமைப்பு, மக்களின் போராட்டம் ஆகியவற்றை கொண்டாடவும் மனித உரிமை பற்றிய உலகளாவிய பிரகடனத்தை மீண்டும் வலியுறுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’’
‘‘எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டால் அதை எதிர்த்து பெரும் போரட்டம் வெடிக்கும். அந்த போராட்டம் அரசை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிடும்’’ என்று மேத்தா பட்கர் கூறினார்.
மக்களின் குரல்களும் அவர்களின் தேவைகளும் ஒடுக்கப்படும் இந்த சூழ்நிலையில் மக்களின் எதிர்ப்புகளை கொண்டாடுவது மிகவும் முக்கியம் என்று சமூக ஆர்வலர் சப்னம் ஆஷ்மி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Label