OUR CLIENTS
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று முழு கதவடைப்பு போராட்டம்
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று முழு கதவடைப்பு போராட்டம் Posted on 10-Dec-2018 ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இன்று முழு கதவடைப்பு போராட்டம்

ஸ்ரீநகர்:-

   ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் இன்று நடத்திய முழு கடையடைப்பினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை  முன்வைத்து பிரிவினைவாத அமைப்புகள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இன்று கருப்பு நாளாக பார்க்க வேண்டும் என்று பிரிவினைவாத அமைப்புகள் இன்று முழு பந்த் நடத்த அழைப்பு விடுத்தன.  அதன் பேரில் காஷ்மீரில் முழுக் கதவடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர் சயீத் அலி ஷா ஜிலானி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலவர் யாசின் மாலிக், மிர்வாய்ஸ் உமர் உள்ளிட்ட பிரிவினைவாத இயக்க தலைவர்கள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்
இந்தப் போராட்டத்தால் இன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் பல இடங்களில் கடைகள்,  எரிபொருள் நிலையங்கள்  மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் முடங்கியது. பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Label