OUR CLIENTS
இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு
இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு Posted on 10-Dec-2018 இந்த ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்யும் தேதி மார்ச் 31 வரை நீட்டிப்பு

புதுடெல்லி:- 
  
சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக இந்த ஆண்டு தாக்கல் செய்ய வேண்டிய ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கைக்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசுக்கு சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குள் ஜி.எஸ்.டி. கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில், GSTR-9, GSTR-9A மற்றும் GSTR-9C படிவங்களை (ஃபார்ம்) தாக்கல் செய்யும் காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட படிவங்கள் ஜி.எஸ்.டி. தொடர்பான பொது இணையவெளியில் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label