OUR CLIENTS
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்.. தொடர்ந்து பாஜக 96 இடங்களில் முன்னிலை
மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்.. தொடர்ந்து பாஜக 96 இடங்களில் முன்னிலை Posted on 11-Dec-2018 மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்.. தொடர்ந்து பாஜக 96 இடங்களில் முன்னிலை

போபால்:-

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் தொடக்கத்திலேயே பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், தற்போது 24 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து பொதுமக்கள் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003 ஆம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸின் பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் 15 ஆண்டாக ஆட்சி செய்து வருகிறார். இதனால் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வந்தது.  
இந்நிலையில், இன்று அங்கு எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பதை உறுதி படுத்தும் விதமாக அமைந்து வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் அடுத்த நிலையில் இருந்து வருகிறது

Label