OUR CLIENTS
கோமாரிக்கு தரமற்ற தடுப்பூசியா? கால்நடை வளர்ப்போர்கள் கவலை!
கோமாரிக்கு தரமற்ற தடுப்பூசியா? கால்நடை வளர்ப்போர்கள் கவலை! Posted on 11-Dec-2018 கோமாரிக்கு தரமற்ற தடுப்பூசியா? கால்நடை வளர்ப்போர்கள் கவலை!

கடலூர், டிச.11-

கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்ட ஒன்றரை மாதத்தில் கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அரசு சார்பில் தரமற்ற ஊசி போடப்படுகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய் ஒரு கொடிய நோயாகும். வைராசால் பரவும் இந்தோய் மாடுகளின் வாய் மற்றும் கால்களில் ஏற்படுகிறது. வாய் கோமாரியால் பாதிக்கப்பட்ட மாடுகளின் வாயில் இருந்து எச்சில் ஊற்றிக்கொண்டே இருக்கும். தீவனம் உட்கொள்ளாது. கால் கோமாரியால் பாதிக்கப்பட்ட மாடுகளின் கொலும்புகளில் புழு வைத்து விடும். மாடுகள் நடந்து செல்ல முடியாமலும், தீவனம் உட்கொள்ள முடியாமலும் இளைத்து விடும்.கறவை பசுக்களாக இருந்தால் பால் குறைந்து விடும். கோமாரி நோய் ஒரு இடத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டதால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் சுற்றுப்பகுதிகளில் வேகமாக பரவி விடும். அதனால்தான் இந்நோய்க்கு முன்கூட்டியே அரசு சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது.
அரசு கால்நடை மருத்துவமனையில் இலவசமாக போடப்படும் இந்த தடுப்பூசியை ஏராளமான விவசாயிகள் போட்டு வருகின்றனர். அவ்வாறு தடுப்பூசி போடப்பட்டும் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் அரசு சார்பில் தடுப்பூசி போட்ட பிறகும் கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது.தனியார் கடைகளில் இருந்து வாங்கி போடப்பட்ட ஊசி மருந்து நல்ல பலனை கொடுத்துள்ளது. இதனால் அரசு சார்பில் போடப்பட்ட தடுப்பூசி மருந்து தரமற்றதா என கேள்வி எழுந்துள்ளது. கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு கிராமங்களில் தடுப்பூசி போட்டு ஒன்றரை மாதத்தில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோன்று, கலப்பின பசுக்கள் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சினை ஊசி போடப்படுகிறது. 
அரசு சார்பில் போடப்படும் சினை ஊசியில் பிறக்கும் கன்றுக்குட்டி ஜெர்சி இனத்தைப்போன்று அல்லாமல் நாட்டு மாடுகளைப் போலவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலும் குறைவாகவே கறக்கிறது. இக்குறைபாடுகளால் விவசாயிகள் அரசு சார்பில் போடப்படும் தடுப்பூசி, சினை ஊசிக்கு பதிலாக தனியார் கடைகளில் இருந்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது.இது குறித்து கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுமதி கூறுகையில் தரமான மருந்துகளைத்தான் பயன்படுத்தி வருகிறோம். கோமாரி நோய் வரும் வாய்ப்பு குறைவு. கிராமங்களில் சர்வே செய்து பார்க்கிறோம்.அதேப்போல சினை ஊசியும் ஊட்டியில் இருந்து தரமான விந்து வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம். கன்றுகளை கவனமாக வளர்த்தால் இந்த பிரச்னை இருக்காது. அரசு சார்பில் போடப்படும் சினை ஊசியினால் கிராஸ் பசுக்கள் தான் உருவாகும். இந்த நல்ல பால் கறக்கக் கூடியது என்றார்.

Label