OUR CLIENTS
ஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை!
ஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை! Posted on 11-Dec-2018 ஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை!

கிருஷ்ணகிரி, டிச.11-

 'இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் 700 கிலோ பஞ்சலோக சிலை இடம் பிடித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் உள்ள கும்பகோணம் மெட்டல் மார்ட் கடை சார்பில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது குறித்து, கடை உரிமையாளர், அரசன் கூறியதாவது:கிருஷ்ணகிரியில், 700 கிலோ எடையில் ரிஷப வாகனத்தில் மகாசக்தி சமேத மகா சதாசிவம் பஞ்சலோக சிலை அமைக்கும் பணி ஒன்றரை ஆண்டில் நிறைவடைந்தது. கும்பகோணத்தைச் சேர்ந்த 40 சிற்பிகள் பணியில் ஈடுபட்டனர். இச்சிலை 108 அவதாரங்களில் 216 கைகளுடன் 63 அங்குல உயரம் 36 அங்குல அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை 10 நாட்களுக்கு மக்கள் பார்வையிடலாம். உலக கின்னஸ் சாதனைக்காக, இச்சிலையை பரிந்துரைக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.சென்னையைச் சேர்ந்த, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விவேக் நாயர் அளவீடு செய்து, சாதனை சான்றிதழை வழங்கினார்.

Label