OUR CLIENTS
உலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்!
உலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்! Posted on 11-Dec-2018 உலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்!

திருச்சி, டிச.11

சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் திருச்சியைச் சேர்ந்த பெண் 'டாப் - 10' வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ஸ்டெபி அமல்யா(26). தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சில்வியா- - நெப்போலியன் மகள். திருச்சி இந்திரா காந்தி, சாரநாதன் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்தார். சென்னை மாடல் பாய்ன்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற இவர் அங்கு நடந்த தேர்வு போட்டியில் நான்காவது இடம் பிடித்தார்.அதன் பின் இந்த நிறுவனம் சார்பில் சீனாவில் உள்ள பீஜிங்கில் நடந்த உலக அழகி போட்டியில் ஸ்டெபி அமல்யா பங்கேற்றார். உலக அளவில் 40 நாடுகள் பங்கேற்ற போட்டியில் டாப் - 10 அழகிகள் வரிசையில் ஸ்டெபி அமல்யா ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

Label