OUR CLIENTS
மதுபான நிறுவனத்தில் ரூ.55 கோடி பறிமுதல்!
மதுபான நிறுவனத்தில் ரூ.55 கோடி பறிமுதல்! Posted on 11-Dec-2018 மதுபான நிறுவனத்தில்  ரூ.55 கோடி பறிமுதல்!

சென்னை, டிச.11-
 மதுபான ஆலை நிறுவனத்தில் இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 55 கோடி ரூபாயை வருமான வரி துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை, தி.நகரைச் சேந்தவர் ஸ்ரீனிவாச ரெட்டி. இவர் 'பாலாஜி குழுமம்' என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த குழுமத்துக்கு சொந்தமாக பூந்தமல்லி அருகே மது ஆலை இயங்கி வருகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னை, தி.நகர், அபிபுல்லா சாலையில் செயல்படுகிறது.இந்த நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் வந்த நிலையில் பாலாஜி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். பாலாஜி குழும உரிமையாளர் ஸ்ரீனிவாச ரெட்டியின் இல்லம் நிர்வாகிகள் உட்பட முக்கிய அதிகாரிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனையின் முதல் நாளில் கணக்கில் வராத 40 கோடி ரூபாய் இரண்டாவது நாளில் 15 கோடி ரூபாயை வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து வரி ஏய்ப்பு நடந்தது எவ்வளவு என கணக்கிடும் பணி நடந்து வருவதாகவும் வருமான வரி துறை தரப்பில் கூறப்படுகிறது.

Label