OUR CLIENTS
அண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை!
அண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை! Posted on 11-Dec-2018 அண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை!

சென்னை, டிச.11-

அண்ணா பல்கலையில், சில மாதங்களாக, பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. தேர்வு துறையில், தொடர்ந்து குளறுபடி ஏற்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லூரிகளுக்கு டிச., 3ல் நடந்த கணித தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆனதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல 'எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன்ஸ்' துறையில் 'ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்' என்ற பாடத்துக்கு தேர்வு நடந்தது. அதில் 2017 நவம்பரில் வந்த பழைய வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.
பல்கலையின் நேரடி கல்லூரிகளுக்கான தேர்வு துறையில் என்.ஆர்.ஐ., விடைத்தாள் திருத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு நீக்கப்பட்டு புதிதாக சஞ்சீவி என்ற பேராசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலையின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி காலியாக உள்ளது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் குமார் பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். கணித துறை பேராசிரியர் வெங்கடேசன் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.
இந்நிலையில் அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்விக்கு மாணவர் சேர்க்கை அறிவிப்பு பதிவாளர் என்ற பெயரில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பதிவாளரே இல்லாமல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டது போல் அறிவித்தது எப்படி என உயர்கல்வி அதிகாரிகளும் பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பதிவாளர் இல்லாத நிலையில் பதிவாளர் பொறுப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது தொலைநிலை கல்வி இயக்குனர் வழியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்கலாம். மாறாக, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில், பதிவாளர் இருப்பது போல அறிவிக்கை செய்தது, பல்கலையின் நிர்வாகத்துக்கு சட்ட பிரச்னைகளைஏற்படுத்தும் என, சில பேராசிரியர்கள் கூறினர்.
ஏற்கனவே பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவும் நிலையில் பதிவாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Label