OUR CLIENTS
ஓ.பன்னீர்செல்வம் மகன் மீது திருநெல்வேலி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!
ஓ.பன்னீர்செல்வம் மகன் மீது திருநெல்வேலி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்! Posted on 11-Dec-2018 ஓ.பன்னீர்செல்வம் மகன் மீது திருநெல்வேலி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

திருநெல்வேலி, டிச.11-
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் உறவினர்கள் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாலாமடை கட்டளை கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான உச்சிமாகாளி என்பவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், பாலாமடை மற்றும் அதைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி மற்றும் சிற்றாறு ஆகியவற்றை நம்பியே இப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சீவலப்பேரி அருகில் உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. 
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் வீட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துக்குப் பெண் எடுத்துள்ளார். அந்த வகையில் ரவீந்திரநாத் மற்றும் அ.தி.மு.க. பிரமுகரான  ரவி ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். 4 மணல் அள்ளும் வாகனங்கள் மூலமாகத் தினமும் 150 லாரிகளில் மணல் அள்ளப்பட்டு நாகர்கோவில் வழியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படுகிறது. கடந்த இரு மாதங்களாக இந்தக் கும்பல் மணல் அள்ளி வந்த போதிலும், அதைக் காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். 
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதிக்குச் சென்று சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை நிறுத்துமாறு தெரிவித்ததற்கு என்னை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்கள். அதனால் விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக மனு அளித்த பின்னர் உச்சிமாகாளி தெரிவித்தார். துணை முதல்வரின் மகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Label