OUR CLIENTS
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் முக அடையாளம் மூலம் வருகையை பதிவு செய்யும் செயலி
அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் முக அடையாளம் மூலம் வருகையை பதிவு செய்யும் செயலி Posted on 11-Dec-2018 அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் முக அடையாளம் மூலம் வருகையை பதிவு செய்யும் செயலி

பள்ளிகளில் முக அடையாளத்தைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவிகளின் வருகையை பதிவு செய்யும் புதிய முறையை சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்துள்ளார். 
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் பள்ளிகளின் மாணவர்களின் முகங்களை அடையாளம் கண்டு வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை - அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், இந்தியாவிலேயே முதல்முறையாக அமைச்சர் செங்கோட்டையன் இந்த அதிநவீன வருகைப்பதிவு முறையை தொடங்கி வைத்தார். image
முக அடையாளம் மூலம் வருகை பதிவு செய்யும் செயலியில், மாணவர்களின் புகைப்படங்கள்,  பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் சேமிக்கப்படும். ஆசிரியர் செல்போனில் மாணவர்களை குழுவாக படம் பிடித்தால் வகுப்புக்கு வந்திருக்கும் - வராத மாணவர்களின் விவரங்களை காண்பித்து விடும். புகைப்படம் தெளிவாக பதிவாகவில்லை என்றால் பீப் என்ற சத்தம் ஒலிக்கும். மீண்டும் படம் பிடித்து வருகையை பதிவு செய்யலாம். வருகை விவரங்கள் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரி மற்றும் பெற்றோருக்கு செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் சென்றுவிடும்.
இந்த தகவல்களை இணையதளத்திலும் சேமித்து வைக்கலாம். முதலில் சோதனை முறையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு ‘ஏ’ பிரிவு மாணவிகள் 54 பேரின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் சோதனைக்குப் பின் சென்னையின் மற்ற பள்ளிகளிலும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்
செயற்கை நுண்ணறிவு வருகைப்பதிவு தொழில்நுட்பத்தின் மூலம், மாணவிகள் பள்ளிக்கு வரும் நேரமும், பள்ளி முடிந்து வெளியேறும் நேரமும் பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதேபோல, தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க முடியும். இனிவரும் காலங்களில், இணையத்தளம் வாயிலாக தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்து பெற்றோர் அறிந்து கொள்ள முடியும்.

Label