OUR CLIENTS
மார்கபந்தீஸ்வரர் கோயிலில் சிம்மக் குளம் திறப்பு குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீராடி வழிபாடு!
மார்கபந்தீஸ்வரர் கோயிலில் சிம்மக் குளம் திறப்பு குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீராடி வழிபாடு! Posted on 11-Dec-2018 மார்கபந்தீஸ்வரர் கோயிலில்  சிம்மக் குளம் திறப்பு குழந்தை வரம் வேண்டி பெண்கள் நீராடி வழிபாடு!

வேலூர், டிச.11-

கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி வேலூர், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு சிம்மக் குளம் திறக்கப்பட்டது. குழந்தை வரம் வேண்டி இந்தக் குளத்தில் ஏராளமான பெண்கள் நீராடி வழிபாடு செய்தனர்.
வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற மார்கபந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்குள்ள சிம்மக் குளத்தில் கார்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமை பெண்கள் நீராடி, ஈரச் சேலையுடன் கோயிலில் தங்கி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, கார்த்திகை கடைஞாயிறு விழாவையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு சிம்மக்குளத்தை ரத்தினகிரி பாலமுருகனடிமை, கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் சிம்மக்குளத்தில் நீராடி கோயிலில் தங்கினர். 
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை பிரம்ம குளத்தில் தீர்த்தவாரி, பாலகனாகப் பிறந்த  பிரம்மனுக்கு உபநயன சிவ தீட்சை, மாடவீதிகளில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது. இதில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் திராளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Label