OUR CLIENTS
போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்கு சமூகநல சிந்தனையாளர் விருது!
போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்கு சமூகநல சிந்தனையாளர் விருது! Posted on 11-Dec-2018 போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ.,க்கு சமூகநல சிந்தனையாளர் விருது!

திருநெல்வேலி, டிச.11-

சிறந்த சமூகநல சிந்தனையாளர் விருது பெற்றார் திருநெல்வேலி போக்குவரத்து காவல்  உதவி ஆய்வாளர்.
லயன்ஸ் கிளப் ஆஃப் திருநெல்வேலி கிரீன் சிட்டி மற்றும் டீம் டிரஸ்ட் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்  சாலையில் உள்ள விஜயா கார்டனில் நேற்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலரும், டீம் டிரஸ்ட் நிறுவனருமான லயன் திருமலை முருகன் தலைமை வகித்தார். டீம் டிரஸ்ட் நைனா முகம்மது வரவேற்று பேசினார். 
லயன்ஸ் கிளப் ஆஃப் திருநெல்வேலி கிரின் சிட்டி தலைவர் லயன் செந்தில் முருகன் தலைவர் உரையாற்றினார். பணி நிறைவு பெற்ற மாவட்ட நீதிபதி ராமச்சந்திரன் பாளை., மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், பாளை சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் சக்கரவர்த்தி , அரிமா மாவட்டம் 2ம் துணை நிலை ஆளுநர் ஜஸ்டின் பால் , அரிமா மாவட்டம் 100வது ஆண்டு முதல் பெண் ஆளுநர் சுதந்திர லெட்சுமி, பரமகுடி லயன் ஜெகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
சிறந்த சமூக நலசிந்தனையாளர் விருது பெற்ற போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரைக்கு பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பாராட்டு சான்று வழங்கி கௌரவித்தார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளும் , ஏழை எளியோருக்கு தையல் மிஷின் உட்பட பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Label