OUR CLIENTS
பாராளுமன்ற கூட்டத்தொடர் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க தயார் பிரதமர் நரேந்திர மோடி சவால்
பாராளுமன்ற கூட்டத்தொடர் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க தயார் பிரதமர் நரேந்திர மோடி சவால் Posted on 11-Dec-2018 பாராளுமன்ற கூட்டத்தொடர் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்க தயார் பிரதமர் நரேந்திர மோடி சவால்

புதுடெல்லி, டிச.11-

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்தில் பிரதமர்  நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், சி.பி.ஐ. சார்பில் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை கேட்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இடையூறின்றி சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
மேலும், பொதுநலன் சார்ந்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டதாக இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர் களை சந்தித்துப் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்,"ரூ.58 ஆயிரம் கோடி ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கவேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தப்படும்.
அதுமட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அரசு நிறுவனங்களை தவறாக பயன்படுத்தும் அரசு நடவடிக்கைகளை அம்பலப்படுத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்,"நெடுஞ்சாலைகளிலும், அரசியல் தலைவர் வீட்டிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடக்கின்றன என பல தகவல்கள் கிடைத் துள்ளன. மோசடிகளை தவிர்க்க வரவிருக்கும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம். மேலும், விவசாயிகள் பிரச்சினைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.

Label