OUR CLIENTS
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ட்விட்டரில் கருத்து
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ட்விட்டரில் கருத்து Posted on 12-Dec-2018 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து... மக்களின் தீர்ப்பை ஏற்பதாக ட்விட்டரில் கருத்து

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்பதாக கூறியுள்ளார்.
மக்களவைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.சட்டீஸ்கரில் பா.ஜ.கவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு என்றும், மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ள நிலையில், பிரதமர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் ((தலை வணங்கி ))ஏற்பதாக கூறியுள்ளார். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்று குறிப்பிட்டுள்ள மோடி, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Label