OUR CLIENTS
சிறுவர்களை கொல்ல முயற்சியா? கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு!
சிறுவர்களை கொல்ல முயற்சியா? கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு! Posted on 12-Dec-2018 சிறுவர்களை கொல்ல முயற்சியா?  கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு!

ஈரோடு, டிச.12-
கொடிவேரி அணையில் சிறுவர் களை கொல்ல முயற்சி நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நேரத்தில் மீனவர்கள் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என மீனவர் கூட்டுறவுச் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொடிவேரி அணைக்கு சுற்றுலா வரும் சிறுவர்களைக் கொல்ல முயற்சி நடந்தது குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இந்த தகவலின் உண்மை நிலை குறித்து காலச்சக்கரம் நாளிதழில் அண்மையில் விரிவான செய்தி வெளியானது. சிங்கப்பூரைச் சேர்ந்த மென்பொறியாளர் திருவேங்கடம் என்பவரது இரு மகன்கள் டிசம்பர் 2-ம் தேதி கொடிவேரி அணையில் குளிக் கச் சென்றதும், அவர்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சி நடந்ததும் குறித்து காவல் துறை தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொடி வேரி அணைப் பகுதியில் உள்ள 34 மீனவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண் டுள்ள போலீஸார், அணைப் பகுதி யில் வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பெரியகொடிவேரி மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எஸ்.மயில்சாமி கூறியதாவது: கொடிவேரி அணைப்பகுதியில் குளிக்கக்கூடாது என்று பொதுப் பணித்துறை தடை விதித்துள்ளது. எனவே, அணையில் இருந்து வழிந்தோடும் பகுதியில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
கொடிவேரி அணையில் பரிசல் இயக்குதல், மீன் விற்பனை என எங்கள் வாழ்வாதாரமே சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் மீனவர்கள் தவறு செய்தார்கள் என்று ஒரு புகார்கூட எழுந்ததில்லை. அணைப் பகுதியில் குளிக்கும்போது சுழலில் சிக்கி யாராவது இறந்தால், போலீஸார் கேட்டுக்கொண்டால் மட்டுமே உடலை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், குளிக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல சுற்றுலாப் பயணிகளை எங்களது மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். 
இந்நிலையில் தற்போது எங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு பின்னர், சுற்றுலாப் பயணிகள் இருக்கும் நேரத்தில் மீனவர்கள் யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என கட்டுப் பாடு விதித்துள்ளோம். எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை துடைக்க வேண்டும் என்பதால், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிவதில் நாங்கள் போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், என்றார்.

Label