OUR CLIENTS
விபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்!
விபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்! Posted on 12-Dec-2018 விபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்!

மதுரை, டிச.12-

போலீஸ்காரர் மகன் விபத்தில் இறந்த அதிர்ச்சியால் அவரது தாயும் மாரடைப்பால் இறந்தார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் முருசேகன். இவரது மகன் தங்க பாண்டியன்(28).

உசிலம்பட்டி அருகிலுள்ள கீழமாத்துரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் தினேஷ்குமார் (27). இவர்கள் இருவரும் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலர் களாக பணிபுரிந்தனர். இருவரும் நேற்று முன்தினம் மதுரையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பும்போது, ரோட்டின் மையத் தடுப்பில் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக் குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கபாண்டியன் மரணம் அடைந்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட தினேஷ்குமாரும் நேற்று முன்தினம் இரவு இறந்தார். 
இதுதொடர்பாக செக்கானூரணி போலீஸார் விசாரிக் கின்றனர். இந்நிலையில் மகன் ராஜபாண்டியன் மரணம் அடைந்த தகவலை அறிந்த அவரது தாயார் அங்கம்மாள் (55) திடீரென மயங்கி விழுந்தார். அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கணவர் முருகேசன் ஏற்கெனவே இறந்து விட்டார். ஒரு மகன் மகள் இருந்தனர். மகன் இறந்த செய்தியை கேட்டு தாயும் மரணமடைந்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Label