OUR CLIENTS
எதை நோக்கி செல்கிறது தமிழகம்?
எதை நோக்கி செல்கிறது தமிழகம்? Posted on 12-Dec-2018 எதை நோக்கி செல்கிறது தமிழகம்?

திருநெல்வேலி, டிச.12-

சமூக விரோதிகளின் ஊக்க மருந்து (போதை) கூடாரமாக மாறி வரும் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் மையப்பகுதியில் அமைந்துள்ளது வ.உ.சி மைதானம். நாட்டின் சுதந்திரத்திற்காக செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் பெயரை தாங்கி கொண்டுள்ள இந்த மைதானத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தால் சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. வேறு எந்த விதமான கேளிக்கை. குழந்தைகளுடன் குடும்பத்தினருடன் சென்று கண்டுகளிப்பதற்க்கென நெல்லையில் எந்த விதமான அம்சங்களும் இல்லாத நிலையில், இங்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
இதனால் இப்போது மாலை நேரத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுடன் இங்கு வந்து நேரத்தை செலவிட்டு மகிழ்வுடன் செல்கின்றனர்.  மேலும் இம்மைதானத்தில்  பாளை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் முயற்சியில் இளைஞர்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம், நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டது. உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள், -வீராங்கணைகள் வருவது உண்டு. மைதான வளாகத்தில் அண்மையில் அங்கு கிடந்த சில பொருட்கள் அனைவரையும்  அதிர்ச்சியளிக்க வைத்துள்ளது. 
காரணம் அங்கு போதை மருந்து பயன்படுத்தியதன் அறிகுறியாக சிரிஞ்சுகள் (போதை ஊசிகள்) கிடந்தது பெரிதும் வேதனை தருவதாகும். மேலும் மைதானத்தின் சுற்றுசுவர் தாழ்வாக இருப்பதாலும,; இருள் சுழ்ந்து காணப்படுவதாலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மைதானத்திற்குள் நுழைந்து ஊக்கமருந்து கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே சுற்றுச்சுவரை உயர்த்தியும். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் இப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி சமூக விரோதிகளை கண்டறிந்து  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Label