OUR CLIENTS
காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! Posted on 12-Dec-2018 காங்கிரஸ் கட்சியினர்  இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

வாணியம்பாடி, டிச.12-

5 மாநில தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து வாணியம்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராஜஸ்தான் சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம் பாஷா தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் மேலும் இது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கட்சியினர் கோஷங்கள் எழுப்பி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் அக்கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.ஃபரீத் அகமத், மகளிர் ஒருங்கிணைப்பாளர் கே.எம்.பைசல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் எம்.சலாவுதீன், முன்னாள் நகர காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு கவியரசு, நகர தலைவர் விவசாய அணி முதசீர் பாஷா, வாணியம்பாடி சட்டமன்ற இளைஞர் கட்சி இளவரசன், சங்கர், தமிழ்வாணன், இளங்கோவன், முஹம்மத் பாஷா, ஷேக் அஸ்லம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Label