OUR CLIENTS
எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மாலை அணிவிப்பு!
எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் மாலை அணிவிப்பு! Posted on 12-Dec-2018 எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு  ஆளுநர் பன்வாரிலால் மாலை அணிவிப்பு!

தூத்துக்குடி, டிச.12-

பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாலை அணிவித்தார். 
தனது கவிதைகளால் இந்திய சுதந்திரத்துக்கு பாடுபட்ட மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி உடனிருந்தார். பின்னர் அவர் பாரதியார் பிறந்த இல்லத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெறும் விழாவிலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு மாவட்ட எஸ்.பி., முரளிரம்பா உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Label