OUR CLIENTS
தார் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்!
தார் சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்! Posted on 12-Dec-2018 தார் சாலை அமைக்கும்  பணி தடுத்து நிறுத்தம்!

செங்கம், டிச.12-
செங்கம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்துள்ள தேவானந்தல் கிராமத்துக்கு புதுப்பாளையம் பகுதியிலிருந்து தேவானந்தல் பகுதிவரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியினை அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் தரமற்ற தார்சாலை அமைத்து வருவதாக கூறி தார் சாலை அமைக்கும் வாகனங்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திடீர் பரபரப்பு நிலவியது. 
  செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவானந்தல் கிராமத்துக்கு முறையான சாலைவசதி இல்லை என பலமுறை போராட்டம் நடத்தியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இந்த பணியை அரசு ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் விடப்பட்டது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு தார் சாலை அமைக்க 64 லட்ச ரூபாய் செலவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக சாலை அமைக்கும் பணியினை அரசு ஒப்பந்தாரர், அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி செய்து வருகிறார்.
  இந்நிலையில் நேற்று காலை தேவானந்தல் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்று அமைத்து இருப்பதாகவும் இருசக்கர வாகனங்கள் சென்றால் கூட சாலை பழுதாகி வருவதாகவும் புகார் தெரிவித்தனர் கிராம மக்கள். அதனால் இந்த சாலை எப்படி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் வாகனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர்.
  இதுபோன்று தரமற்ற சாலை அமைக்கும் அரசு ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரத்து செய்து விட்டு மாவட்ட ஆட்சியரின் நேரடி மேற்பார்வையில் எங்கள் பகுதிக்கு தரமுள்ள தார் சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஏற்று மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக அரசு ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலருடன் இணைந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

Label